Home









WEB DIRECTORY MAINTAIN BY


Eva.D PAUL BEZALEEL M.Div,D.Th,D.B.S(U.S.A),D.R.A/C

BRO.JOSEPH RAJAN


No.28, St.Thomas Street, Kamarajapuram, Pattabiram,
Chennai – 600 072.Cell 8939397038,
Email:paulbezaleel@gmail.com/
     chennaichurches@gmail.com


Website:

Chennai Churches List

CHENNAI CHURCHES A CHENNAI CHURCHES B

CHENNAI CHURCHES C CHENNAI CHURCHES D

CHENNAI CHURCHES E CHENNAI CHURCHES K
CHENNAI CHURCHES M CHENNAI CHURCHES P

 
CHENNAI CHURCHES S CHENNAI CHURCHES T

CHENNAI CHURCHES V


THIRUVALLUR CHURCHES
THIRUVALLUR CHURCHES

Welcome to Chennai

WELCOME Dr.JAYALALITHA









1. நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;

2. நாம் எல்லாப் பக்தியோடும்
நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.


3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அ
டையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.


I தீமோத்தேயு2:1-4






ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.
நீதிமொழிகள்21:1


படிமம்:Ripon Building Chennai.JPG
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம். 1913ல் ரிப்பன் துரையை
கௌரவப்படுத்தும் விதமாக கட்டப்பட்டது.




Chennai Central - "Gateway of the South"



Chennai, Tamil Nadu
Chennai Map
Chennai Map

சென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

சென்னையின் பொருளாதாரம் பலத்தரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது . ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. மேலும் ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரி பாகங்கள் உற்பத்தியிலும் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில உள்ளது.


வரலாறு

வரலாற்றில் சென்னை

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது. கடந்த 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள்.

அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததார்.

புனித தோமா (திருத்தூதர்)
புனித தோமையார் (அப்போஸ்தலர்)

Saint Thomas (Apostle)
படிமம்:Caravaggio - The Incredulity of Saint Thomas.jpg

புனித தோமா (அ) புனித தோமையார் ( Saint Thomas the Apostle, 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ) கிறிஸ்தவ புனிதராவார். இவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். இவரின் மிகவெளிபடுத்தபட்ட சொல், "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! " (யோவான் 20:28) என்பது ஆகும். இயேசு உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவரை ஆங்கிலதில் இவர் 'சந்தேகமுள்ள தோமா' (Doubting Thomas) என அழைக்கபடுகிறார்.

மற்ற பெயர்கள்

(யோவான் நற்செய்தியில் இவருக்கு "இரட்டையர்" (கிரேக்க மொழி: Didymus "திதைமுஸ்") என்ற மற்றோரு பெயரும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. (யோவான் 11:16; 20:24). மேலும் அரமேய மொழியில் 'தோமா' என்னும் பெயரின் மூளம் "இரட்டையர்" என்னும் பொறுள்படும்.

இந்தியாவில்

இவர் கிறிஸ்தவத்தை பரப்புவதற்காக கிபி 52-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். அவர் கப்பலில் பயணம் செய்து கேரளாவின் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். அங்கே மறைபணி ஆற்றினார். கேரளாவின் அரசர் கொண்டாபாரஸ் அவருக்கு மிகவும் அதிகமாக உதவிகள் செய்தார். எனவே புனித தோமா ஏழு கிறிஸ்தவ ஆலயங்களை கேரளாவில் உருவாக்கினார். அவை கொடுங்கலூர், பாளையூர், கோட்டக்காவு, கொக்கமங்கலம், நிராணம், கொய்லான், நிலைக்கால் என்பவை ஆகும்.

அதன் பிறகு புனித தோமா சென்னைக்கு சென்று, மயிலாப்பூரில் மறைபணி ஆற்றினார். அங்கே சிலர் அவருக்கு விரோதிகளாகி, அவரை கொல்ல திட்டமிட்டனர். ஆகையால் தோமா அவ்விடத்தை விட்டு, சின்ன மலைக்கு சென்றார். அங்கே அவ‌ர் ஒரு குகையில் வாழ்ந்தார். தானே ஒரு க‌ல்லில் சிலுவை ஒன்றை செய்து வைத்து வ‌ழிப‌ட்டு வ‌ந்தார்.அவ்விட‌த்தில் அற்புத‌மாக‌ ஒரு பாறையிலிருந்து அவ‌ருக்கு த‌ண்ணீர் கிடைத்த‌து. இப்போதும் இது புனித‌ நீருற்றாக‌ அழைக்க‌ப்ப‌டுகிற‌து. அவரை பின் தொடர்ந்தவர்கள் அனைவரும் சேர்ந்து, மயிலாப்பூரில் ஆலயம் ஒன்றை கட்டினர். அவ்வாலயம் சாந்தோம் தேவாலயம் என்று இப்போது அழைக்கப்படுகிறது.

படிமம்:Santhome Basilica.jpg

சென்னை சாந்தோம் தேவாலயம்

இறப்பு

அவ‌ர் வேண்டிக்கொண்டிருக்கும் போது அவ‌ருடைய‌ எதிரிக‌ள் அவ‌ரை கல்லெறிந்தும், அவ‌ருட‌ய‌ முதுகில் ஒரு க‌ல் க‌த்தியால் குத்தியும், அவ‌ரை கொலை செய்தார்க‌ள். ம‌காதேவ‌ன் என்ற‌ அர‌ச‌ர் இந்த‌ செய்தியை கோள்விப்ப‌ட்டு, அவ்விட‌த்திற்கு வ‌ந்து, அவரை ஒரு ராஜ‌ரீக‌மான பெரிய‌ முறையில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்தார்.

ஐயப்படும் தோமா
பிறப்பு ~ கிபி 1 (முற்பகுதி) கலிலேயா
இறப்பு டிசம்பர் 21, 72-கிபி மைலாப்பூர், இந்தியா [1][2]
மதிக்கப்படுவது எல்லா கிறித்தவப் பிரிவுகளும்
பிரதான ஆலயம் சென்னை சாந்தோம் தேவாலயம்
குணாதிசியங்கள் இயேசுவின் விலாவில் கையை இடுபவராக, வேல்
காப்பாளர் கட்டட கலைஞர், இந்தியா, மற்றும் பல
தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.
(யோவான் 20:28)

குறிப்புகள்

  1. "Saint Thomas (Christian Apostle) - Britannica Online Encyclopedia". Britannica.com.

16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது. 1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.


St. Mary, Saint Mary, St. Mary church, Chennai Mary Church
சென்னையில் அமைந்துள்ள
புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள
புனித மேரி தேவாலையம்

ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் வருடம் மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996ஆம் வருடம் தமிழக அரசாங்கம் மதறாஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரிட்டிஷார் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.

St. Thomas Mount



Marina Beach "Second Largest Beach"